தமிழக செய்திகள்

பெரம்பூர் நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை

அடுத்த 2 நாட்கள் பெரம்பூர் தொகுதியில் த.வெ.க.வினர் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.

சென்னை,

சட்டசபை தேர்தல் பிரசாரம் 21-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் முழு வீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் 21-ந்தேதி சென்னை நந்தனத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே, த.வெ.க. தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரம்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். பெரம்பூர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம், வாக்குசாவடி முகவர்கள் நியமனம், தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு விஜய் ஆலோசனை வழங்கினார்.

அடுத்த 2 நாட்கள் பெரம்பூர் தொகுதியில் த.வெ.க.வினர் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார். வாக்குசாவடி முகவர்களாக நியமிக்கப்படுபவர்கள் வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.