தமிழக செய்திகள்

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி

இம்மானுவேல் சேகரனார் வழியில் நடைபோடுவோம் என முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார். சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT