சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பதவியேற்றவுடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். அதற்கான அரசணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை கடந்த 10 -ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய நடைமுறை மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணத்தில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் தகவலையும் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது, 200 யூனிட் மின்சாரம் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.235 மிச்சமாகும். 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இதன் மூலம் மின் கட்டண தொகையில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.
| யூனிட் | பழைய கட்டணம் | புதிய கட்டணம் |
|---|---|---|
| 210 | ரூ.282 | ரூ.47 |
| 220 | ரூ.329 | ரூ.94 |
| 230 | ரூ.376 | ரூ.141 |
| 240 | ரூ.423 | ரூ.188 |
| 250 | ரூ.470 | ரூ.235 |
| 260 | ரூ.517 | ரூ.282 |
| 270 | ரூ.564 | ரூ.329 |
| 280 | ரூ.611 | ரூ.376 |
| 290 | ரூ.658 | ரூ.423 |
| 300 | ரூ.705 | ரூ.470 |
| 310 | ரூ.752 | ரூ.517 |
| 320 | ரூ.799 | ரூ.564 |
| 330 | ரூ.846 | ரூ.611 |
| 340 | ரூ.893 | ரூ.658 |
| 350 | ரூ.940 | ரூ.705 |
| 360 | ரூ.987 | ரூ.752 |
| 370 | ரூ.1034 | ரூ.799 |
| 380 | ரூ.1081 | ரூ.846 |
| 390 | ரூ.1128 | ரூ.893 |
| 400 | ரூ.1175 | ரூ.940 |
| 410 | ரூ.1238 | ரூ.1003 |
| 420 | ரூ.1301 | ரூ.1066 |
| 430 | ரூ.1364 | ரூ.1129 |
| 440 | ரூ.1427 | ரூ.1192 |
| 450 | ரூ.1490 | ரூ.1255 |
| 460 | ரூ.1553 | ரூ.1318 |
| 470 | ரூ.1616 | ரூ.1381 |
| 480 | ரூ.1679 | ரூ.1444 |
| 490 | ரூ.1742 | ரூ.1507 |
| 500 | ரூ.1805 | ரூ.1570 |
500 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை.