தமிழக செய்திகள்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்

அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சை

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அன்றைய தினமே அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலையில் முன்னேற்றம்

இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT