சென்னை,
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அரசு பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி திரவம் தெளிப்பதற்காக கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.