நாமக்கல்,
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் முட்டையின் விலை 20 காசுகள் குறைந்து கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.6.80 ஆக இருந்தது.
முட்டை வரலாற்றிலேயே அதிகபட்ச விலை இதுவாகும். பின்னர் படிப்படியாக குறைந்து ஆகஸ்டு 2-ந் தேதி முதல் முட்டை கொள்முதல் விலை ரூ.5.40 ஆக இருந்த நிலையில், 19 நாட்களுக்கு பிறகு மீண்டும் 20 காசுகள் குறைந்து ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.