நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற் கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.117 ஆக குறைந்து உள்ளது.
முட்டைக்கோழி விலை கிலோ ரூ.118 ஆகவும், முட்டை விலை ரூ.5.40 ஆகவும் உள்ளது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.