தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நான்கு நாள் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,70,988 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 24,478 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,76,761 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,74,629 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 5,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT