தமிழக செய்திகள்

நடப்பு நிதியாண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் அம்ரித் பாரத் உள்பட 35 ரெயில்கள் தயாரிப்பு

ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியாவில் 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது. அதில் பழ மையான மற்றும் பெரிய தொழிற்சாலை ஐ.சி.எப். ஆகும். ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளைத் தயாரித்த இந்த தொழிற்சாலையில் தற்போது உலகத்தரத் திலான பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. இங்கு மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், மெமு ரெயில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள், மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் என அனைத்து வகை ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது.

ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கப்பட்ட காலத்தில் மிக குறைந்த அளவி லேயே உற்பத்தி நடைபெற்றது. ஆனால், தற்போது அதிநவீன வசதிகளு டன், பெட்டிகள் தயாரிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நடப்பு நிதியாண்டில் (2025-26) ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இருக்கை வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரெயில்கள், படுக்கை வசதி கொண்ட 2 வந்தே பாரத் ரெயில்கள், 17 அம்ரித் பாரத் ரெயில்கள், 7 ஏ.சி.மின்சார ரெயில்கள் என மொத்தம் 35 ரெயில் கள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதாவது, 2,090 எல்.எச்.பி. ரெயில் பெட்டிகள், 733 டி.பி.ஆர்.எஸ். ரெயில் பெட்டிகள் என மொத்தம் 2,823 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தெற்கு ரெயில்வேக்கு 6 அம்ரித் பாரத் ரெயில்களும், 2 இருக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயிலும் வழங்கப்பட்டிருப்பதாக அதி காரிகள் தெரிவித்தனர்.