தமிழக செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில்தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

SCROLL FOR NEXT