தமிழக செய்திகள்

மாநில எறிபந்து போட்டியில்தூத்துக்குடி பள்ளி வெற்றி

மாநில எறிபந்து போட்டியில் தூத்துக்குடி பள்ளி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டி திருச்சியில் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை, பள்ளி முதல்வர் ராதா ராஜேசுவரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT