மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். அங்கு கடலில் நீராடிய பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கூட்டம் அலைமோதியதால் கோவில் சன்னதி, கடற்கரை பகுதி, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உச்சக்கால பூஜையின்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இதனையொட்டி தக்கலை, அழகியமண்டபம் மற்றும் திங்கள்நகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
--