தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகன் செல்வம் (வயது 19). இவர் மில்லர்புரம் பாரதிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிப்காட் போலீசார் செல்வத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT