தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் அடுக்குமாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா: எஸ்.பி. குத்துவிளக்கேற்றினார்

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி காவலர் குடியிருப்பை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து காவலர் குடியிருப்பை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் குமரேசன், தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம், தூத்துக்குடி ஏ.எஸ்.பி. (பயிற்சி) ராகுல் V கோபால், தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.