தமிழக செய்திகள்

தள்ளிப்போகிறது திருச்சி மெமு பணிமனை திறப்பு!

எஞ்சிய பணிகள் முடிவடைந்தால் அடுத்த 3 மாதங்களில் பணிமனை பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் மெமு ரெயில் பராமரிப்புப் பணிமனையில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின்சாரக் கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணிமனை திறப்பு தள்ளிப்போகிறது. எஞ்சிய பணிகள் முடிவடைந்தால் அடுத்த 3 மாதங்களில் பணிமனை பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டிய கட்டுமானப் பணிகள்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் குறுகிய தூரம் இயக்கப்படும் மெமு ரெயில்களை பராமரிப்பதற்காக தனி பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனை மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த பணிகள் தொடர்பாக சமீபத்தில் புகார்கள் எழுந்த நிலையில், தெற்கு ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மின்சாரக் கட்டமைப்புகளை மாற்றுவதில் தாமதம்

தமிழக அரசு தரப்பில் மின்சாரக் கட்டமைப்புகளை இடமாற்றம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்ததும், சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு தற்போது வாகனங்கள் சென்று வரும் பகுதியில் தண்டவாள இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்

மின்சாரக் கட்டமைப்புகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட எஞ்சிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால், திருச்சி மெமு ரெயில் பராமரிப்புப் பணிமனை அடுத்த 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT