தமிழக செய்திகள்

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது - அப்பாவு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு

5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை இன்பதுரை கேட்க முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்ற நிலையில், 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று கூறி, இன்பதுரை பெற்ற வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று ஆகாது, அதே சமயம், 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை இன்பதுரை கேட்க முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.