மேட்டூர்,
மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து திடீரென 4 ஆயிரத்து 738 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்த நீர்வரத்து அதிகரித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு நீர்வரத்தை விட தண் ணீர் திறக்கும் அளவு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.31 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.