கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அதிகரித்த சிலிண்டர் விலை.. தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிரடியாக உயர்வு

சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஐடி விடுதி, பி.ஜி. ஓனர்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

விடுகியில் தங்கி இருக்கும் விருந்தினர்களுக்கு வணக்கம். கடந்த 2026 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலிண்டர் ரூ.6000, ரூ.7000 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மர அடுப்புகளை பயன்படுத்தி எங்களால் முடித்த அளவுக்கு உங்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறோம் மரக்கட்டைகளின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளது மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே தங்கும் விடுதிகளின் கட்டணம் மே 5-ம் தேதி முதல்

1) 4 sharing Non Ac Rs.6,500 - Ac Rs.7,500

2) 3 Sharing Non Ac Rs.7,000-Ac Rs.8,000

3) 2 Sharing Non Ac Rs.8,000 - Ac RS.9,000

குறைந்தபட்ச தொகையாக நிர்ணயத்திருக்கிறோம். ஒரு சில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும். அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து உங்களுக்கு சேவை செய்ய வழி செய்யுமாறு வேண்டுகிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.