தமிழக செய்திகள்

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண் ணீர் நன்றாக விழுகிறது.

குற்றாலத்தில் நேற்று காலையில் லேசான வெயில் முகம் காட்டிய நிலை யில், மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. குற்றாலம் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால், அருவிகளில் நீர்வரத்து மேலும் சற்று அதிகரித்தது.

சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அரு விகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அருவி களில் தண்ணீர் நன்றாக விழுவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதனால் கடைகள், ஓட்டல்களில் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர். குற்றாலத்தில் குளுமையான சூழல் நிலவுவ தால் சீசன் களைகட்டியது. வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணி கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.