சென்னை,
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதி வெள்ளிக்கிழமையும், விடுமுறைக்கு அடுத்த நாளான 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் மது விற்பனை நடைபெற்றது.
அதன்படி, 14-ந்தேதி சென்னை மண்டலத் தில் ரூ.55.39 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.43.34 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.42.36 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.39.89 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.32.20 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.213.78 கோடிக்கு மது விற்பனை நடந்தது.
16-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.55.40 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.48 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.38.64 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.38.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.34.07 கோடியும் மதுவிற்பனை நடைபெற்றது. 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.209.22 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.
சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் சேர்த்து 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இதில் 14-ந்தேதி ஆன்லைன் மூலம் மட்டும் ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும், 16-ந்தேதி ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மது விற்பனை நடந்துள்ளது. 2 நாட்களிலும் சேர்த்து ஆன்லைன் மூலம் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.