மதுராந்தகம்,
ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. மதுராந்தகத்தில் இரண்டாம் இடத்தில் தி.மு.க.வும், மூன்றாம் இடத்தில் அ.தி.மு.க.வும் இருந்து வருகின்றன. தாராபுரத்தில் இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க.வும், மூன்றாம் இடத்தில் தி.மு.க.வும் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். 11-வது பூத்தில் வாக்கு இயந்திரம் பழுது அடைந்த நிலையில், அந்த இயந்திரத்தின் விவி பேட் சிலிப்பை எண்ண வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.