தமிழக செய்திகள்

இந்திய விமானப்படை தினம்: ரத்ததான முகாமுடன் கொண்டாடிய தாம்பரம் விமானப்படை நிலையம்

தாம்பரம் விமானப்படை நிலையம் ரத்ததான முகாமுடன் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடியுள்ளது.

சென்னை,

இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதிலும், இறையாண்மையை உறுதி செய்வதிலும் விமானப்படையின் பங்கு அளப்பரியது. விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் தாம்பரம் விமானப்படை நிலையம் ரத்ததான முகாமுடன் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடியுள்ளது. தேசிய தன்னார்வ இரத்ததான தினம் மற்றும் இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், தாம்பரம் விமானப்படை நிலையம், தாம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து இன்று ஒரு தன்னார்வ ரத்ததான முகாமை ஏற்பாடு செய்தது.

இந்த உன்னத நோக்கத்திற்காக ரத்ததானம் செய்ய 44 விமானப்படை வீரர்கள், பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்வந்தனர்.

SCROLL FOR NEXT