தமிழக செய்திகள்

இந்திய தேர்தல் அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகை

ஆலோசனைக் கூட்டத்தின் போது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை,

தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமை யில் அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழகம் வருகின்றனர். 11-ந் தேதி இரவு சென்னை வரும் அவர்கள், 12 மற்றும் 13-ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்க

12-ந் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு விட்டு, அதன் பின்னர் வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத் துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) ஆலோசனை துணை கமிஷனர் மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.