மும்பை,
இந்தியா தனது உள்நாட்டுத் தங்கத் தேவையின் பெரும் பகுதியை வெளி நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. கடந்த 2015 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த சுரங்கக் கொள்கை சீர்த்திருத் தங்கள் மூலமாக தனியார் நிறுவனங்கள், தங்க சுரங்கங்களை அமைக்க லாம். அதன்படி சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாக வணிகரீதியிலான ஒரு பெரிய தனியார் தங்கச்சுரங்கத் திட்டம் ஆந்திரபிரதே சத்தில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
தங்கச் சுரங்கம்
கர்னூல் மாவட்டம், துக்கலி மண்டலத்தில் அமைந்துள்ள சுவர்ணகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார். சுமார் ரூ.405 கோடி முதலீட்டில் உருவாக்கப் பட்டுள்ள இந்தத் திட்டம், நாட்டின் கனிம வளத்துறையில் ஒரு புதிய தொடக்கமாகக் கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் மவுரியபேரரசு காலத்திலேயே தங்கம் வெட்டி எடுக்கப்பட்ட பெருமை இந்த சுவர்ணகிரி பகுதிக்கு உண்டு. பல நூற்றாண்டுகளுக் குப் பிறகு இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் தளம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் கர்நாடகாவின் 'ஹட்டி அரசுத் தங்கச் சுரங்கம் மட்டுமே உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக உருவெடுத்துள்ள முதல் பெரிய அளவிலான பாறைகளில் இருந்து நேரடியாக தங்கம் பிரித்தெடுக்கும் தனியார் தளம் இதுவாகும்.
நடப்பு 2026-27 நிதியாண்டில் முதற்கட்டமாக 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்யவும், பின்னர் ஆண்டுக்கு 2 டன் உற்பத்தி செய்யவும் இலக்கு நிர் ணயிக்கப்பட்டு உள்ளது.