தமிழக செய்திகள்

இந்தியாவின் வலிமை திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல: மு.க.ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

வேலூர்,

சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 136-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வேலூர், விருதம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்., பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” அண்ணல் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.