தமிழக செய்திகள்

இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

இவருக்கு உடந்தையாக இருந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசனை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி கைது செய்யப்பட்டார்.

கைது

இதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசனை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், ஏற்கனவே ஜாமீன் கோரி முகமது புகாரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.

மனு தள்ளுபடி

இந்தநிலையில், முகமது புஹாரி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT