பாலக்கோடு,
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). ஓட்டல் தொழிலாளி. இவருக்கும். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவியை ராஜசேகர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி புதுச்சேரிக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனை நம்பிய மாணவி, கடந்த 4-ந்தேதி நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பஸ்சில் புதுச்சேரிக்கு சென்று, அங்கு ராஜசேகருடன் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
அப்போது ராஜசேகர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மாணவியின் செல்போன் எண்ணை கொண்டு அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர். அதில் மாணவி புதுச்சேரியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று மாணவியை மீட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ வழக்குப்பதிந்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.