தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: வீடு பற்றி கூற மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

படுகாயம் அடைந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச் சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்லா என்ற சதீஷ் (வயது 19). இவர் தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் அண்ணன் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இட்டமொழி அம்பேத்கர் நகருக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (27) என்பவரிடம் சதீஷ் வீடு எங்கு உள்ளது என்று கேட்டனர். ஆனால் அவர் வீடு பற்றி எதுவும் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், முத்துராஜின் கையில் பலமாக வெட்டினர்.

சிகிச்சை

பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

SCROLL FOR NEXT