தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்: ஜே.சி. டி.பிரபாகர் திறந்து வைத்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், இன்று ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Cnetre) திறந்து வைத்தார்.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் (TN Rights Project) கீழ் உலக வங்கி நிதி உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை, மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் வழங்குதல், குறைதீர் சேவைகள் வழங்குதல், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தரமான மற்றும் தொடர்ச்சியான சிகிச்சை அளிக்த்தல் ஆகியவற்றிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென் சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் வட சென்னையில் இரயபுரத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தென்சென்னையில் சாந்தோம் மற்றும் கண்ணகி நகரில் துணைக் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் இன்று (01.08.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.