தமிழக செய்திகள்

உளவுத்துறை, போலீஸ் எச்சரிக்கை; முதல்-அமைச்சர் விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் வருகை தர உள்ளார்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64-வது குருபூஜை வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு ஹெலிபேட் தளத்தில் முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது.

அதே போல தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், உளவுத்துறை, போலீசாரின் எச்சரிக்கையே தொடர்ந்து பசும்பொன் செல்லும் பயணத்தை முதல்-அமைச்சர் விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

பசும்பொன்னில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம். அங்கு முதல்-அமைச்சர் செல்லும்போது, கூட்டம் அதிகமாகி, சிறு அசம்பாவிதம் நடந்தாலும், எதிர்க்கட்சிகள் அதை பெரிதாக்கி அரசியல் செய்யக்கூடும். எனவே, பசும்பொன் பயணத்தை தவிர்க்குமாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். உளவுத்துறையும் அதே ஆலோசனையை - வழங்கியுள்ளது. அதை ஏற்று பசும்பொன் பயணத்தை முதல்-அமைச்சர் விஜய் தவிர்த்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT