சென்னை,
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று ஒரு நாள் மட்டும் டயர்கள் மற்றும் தேவையற்ற பயன்படுத்தப்படாத பொருட்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் 500.9 கிலோ எடையிலான பயன்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் 1337.15 கிலோ எடையிலான தேவையற்ற பயன்படுத்தப்படாத பொருட்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.