சென்னை,
தமிழகத்தில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன் உள்பட பல பிரிவுகளில் கடன் வழங்குகின்றன. இதற்கான நிதியை மக்களிடம் இருந்து வைப்புத் தொகையாக திரட்டுவதுடன், 'நபார்டு' எனப்படும் தேசிய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் கடன் வாங்குகின்றன.
தற்போது கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி, ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதனுடன் சேர்த்து கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.10 ஆயிரம் அல்லது தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என இரண்டில் எது குறைவோ, அந்த தொகை வழங்கப்பட உள்ளது.