தமிழக செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தைகளை அடித்து காயப்படுத்திய இளம்பெண் கைது

இருவரும் தனிமையில் இருக்க குழந்தைகள் இடையூறாக இருந்ததால் இளம்பெண் குழந்தைகளை அடித்து காயப்படுத்தி உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் முத்துநகரை சேர்ந்தவர் சந்தோஷ் (30 வயது). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி அம்முகுட்டி (27 வயது). இவர்களுக்கு மகிலேஷ் (7 வயது) என்ற மகனும், ஸ்ரீநிதி (4 வயது) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அம்முகுட்டிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 11-ந்தேதி கணவர் சந்தோஷ் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த வாலிபர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் தனிமையில் இருக்க குழந்தைகள் இடையூறாக இருப்பதாக நினைத்து அம்முகுட்டி குழந்தைகளை அடித்து காயப்படுத்தி உள்ளார்.

இதையறிந்த சந்தோஷ் குழந்தைகளை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மேலும் கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்முகுட்டியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவருடைய கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருகிறார்கள்.