திருநெல்வேலி,
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட "மாறு" என்ற விழிப்புணர்வு பாடல் வெளியீடு நிகழ்ச்சி இன்று நடந்தது.
நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு அந்த விழிப்புணர்வு பாடலை வெளியிட, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த மோகன் பெற்றுக் கொண்டார். இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துரைத்ததுடன், வரும் தலைமுறையினரை காக்கவும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.