சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்து, நோயாளிகளின் நலனுக்காக பகலிரவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும், சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்கள் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.