தமிழக செய்திகள்

சர்வதேச யோகா தினம்: எல். முருகன் வாழ்த்து

12-வது சர்வதேச யோகா தினத்தில், யோகாவை ஏற்றுக்கொண்டு அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்குவோம்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை வளர்க்கும் ஒரு முழுமையான பயிற்சியாகும். இது உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்தி, தனிநபர்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

சர்வதேச யோகா தினம்

இன்று பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் யோகா ஒரு உலகளாவிய ஆரோக்கிய இயக்கமாகவும், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் உருவெடுத்துள்ளது. 12 வது சர்வதேச யோகா தினத்தில், யோகாவை ஏற்றுக்கொண்டு அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.