சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலையை உருவாக்கும் ஒரு வாழ்க்கை முறை. தினசரி யோகா பயிற்சி ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் மேம்படுத்துகிறது.
இன்றைய நாளில் யோகாவை நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவோம். ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் பெற அனைவரும் யோகாவை கடைப்பிடிப்போம். அனைவருக்கும் சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.