தமிழக செய்திகள்

‘நூலகத்தில் இணைய வசதி; நிதி இல்லையென்றால் நான் பணம் தருகிறேன்’ - திருவாரூர் கலெக்டர் அதிரடி பேச்சு

நூலகத்தில் இணைய வசதி ஏற்படுத்தி தந்தால் உங்களை யாரும் தூக்கில் போட மாட்டார்கள் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்தார்.

திருவாரூர்,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், நூலக குழு உறுப்பினர்கள், செயலக அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இணைய வசதி

இந்த கூட்டத்தில் பேசிய மாணவர்கள் சிலர், நூலகத்தில் கூடுதலாக கணினி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இணைய சேவையை(Wifi) மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நூலக அலுவலர், தனியார் நெட்வொர்க் பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

‘நான் பணம் தருகிறேன்..’

இதையடுத்து கலெக்டர் மோகனசந்திரன் பேசுகையில், “நூலகத்தில் இணைய வசதி ஏற்படுத்தி தந்தால் உங்களை யாரும் தூக்கில் போட மாட்டார்கள். நிதி இல்லையென்றால் நானே பணம் தருகிறேன். உடனடியாக இணைய வசதியை மேம்படுத்துங்கள்” என்று தெரிவித்தார். கலெக்டரின் பேச்சுக்கு மாணவர்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT