தமிழக செய்திகள்

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 10-ந்தேதி நேர்காணல் - திமுக அறிவிப்பு

வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் வரும் 10ம் தேதி திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

"நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-3-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT