நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
தமிழக செய்திகள்

நாகப்பட்டினம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு, மாணவர்களுக்கு கல்விமுறை அறிமுகப் பயிற்சி...

அறிமுகப் பயிற்சி விழாவிற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி விழா நடத்தப்பட்டது.

அறிமுகப் பயிற்சி வகுப்பு

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2026-2027) நடப்பு ஆண்டில் பயிலும் இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகள் முறைப்படி தொடங்கின. இதனை முன்னிட்டு, புதியதாக இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் சூழல், கல்வி முறைகள் குறித்து விளக்கும் வகையில் ஒரு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து இந்த வழிகாட்டுதல் விழாவை ஏற்பாடு செய்து நடத்தினர்.

பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்

பள்ளிச் சூழலில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டப்பட்டது.

புதிய சூழலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் கையாள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த ஒரு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்புகள் மூலம் முதலாமாண்டு மாணவர்கள் தங்களின் கல்லூரிப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கத் தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு விருந்தினர்

இந்த விழாவிற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவர் மாணவர்களிடம் “செல்போன் பயன்பாட்டைக் குறைத்து, நூலகங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்” என்றும் அதற்குப் பதிலாக தங்களது பொது அறிவு மற்றும் கல்வித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் “உயர்ந்த பதவிகளை அடைய கல்வியே அடித்தளம்” என்ற விழிப்புணர்வு உரையை மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்களும் அவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டனர்.

செல்போன் பயன்பாட்டைக் குறைப்பதற்காக இந்த அறிமுகப் பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் கல்வி வழிகாட்டிகள், கல்லூரி வாழ்க்கையில் நுழைந்துள்ள மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் பயனடைந்தனர்.