தமிழக செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு... 20 ஆயிரம் வேலைவாய்ப்பு... சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

சென்னை மாவட்டத்துக்கான திமுகவின் தனி தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் 6' என்ற பெயரில் 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்விவரம் பின்வருமாறு:-

மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள்:-

* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

* மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

* அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.

சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து:-

* பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.

* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்:-

* எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.

* மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028-க்குள் முடிக்கப்படும்.

* மழைநீர் வடிகால்கள் 2028-க்குள் முடிக்கப்படும்.

* பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027-க்குள் முடிக்கப்படும்.

* அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.

மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்குத் தீர்வு:-

* விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.

* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

உலகளாவிய சிறப்பு மையம்:-

* Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies-க்கான சிறப்பு மையம்.

* ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

* 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்

உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway):-

* உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு

* உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

* ஆராய்ச்சி மையம்

* அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்