தமிழக செய்திகள்

ரூ.15,300 கோடி முதலீடுகள்: முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொழில் முதலீட்டின் மைல்கல் - தமிழ்நாடு அரசு

10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் போது ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்துவோம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சிறப்பான ஆட்சி

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப்பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் என மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதுடன், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வருத்துச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கிடும் வகையில் எண்ணற்ற தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2020-ன் வாயிலாக 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புறிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு. இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு லட்சம் கேmடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த 10.9.2026 அன்று இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு

லண்டனில் 12 9.2026 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி I.F.S. அவர்கள் சந்தித்து இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) பின்னணியில், தமிழ்நாடு மற்றும் பிரிட்டனுக்கு இடையே உருவாகக்கூடிய வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்துக் கலந்துரையாடினர்.

சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்டு, 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 3.9.2026 அன் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட் நகரம் (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சிங்கரிஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று அங்குள்ள Race Control மற்றும் Race circut பகுதிகளை பார்வையிட்டார். மேலும் சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சில்லர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தய திடலில் முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொழில் முதலிட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் முன்னிலையில் லண்டனில் 14.09.2026 அன்று வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capabilty Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். புதிய தொழில் முதலீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நோக்கக் கடிதல் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து. 10.000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson international ltd.,) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் வடிவமைப்பு. பொறியியல், உற்பத்தி. ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCCs) விரிபடுத்துவதற்கும். நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்வீடனை சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுயம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது

உலகளாவிய திறன் மையம்

ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் (Ernst & Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கட்டு - இயக்கு - மாற்றியமை - மாற்று (Build-Operate Transform-Transfer-BOTT) ஏற்பாட்டின் கீழ் இந்த மையத்தை நிறுவுவதற்கும் அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் யங் (Ernst & Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர். அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன். 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூத்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திறன்மிக்க மின்மாற்றிகளை தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் (Wilson Power Solutions) நிறுவனம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

* ஐரோப்பாயின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. இத்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விருப்பத்தக்க கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.

ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந் துஜா பினோவெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களைச் சந்தித்து ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற வெற்றி IVETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி ரூபாய் மதிப்பிகான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினர்.

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் குறிப்பாக காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வளாகங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன் உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்

முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ரசாயனங்கள். தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள் சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளை சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதார்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நடத்தினர்.

பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்று ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள், ஒசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு, அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழு வருகை, நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் போன்றவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

வெற்றிப் பயணம் தொடரும்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரும் மேற்கண்ட தொழில் முதலீடுகளை சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து உதவிகளையும் நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் அங்கு தமிழ் சொந்தங்களைச் சந்திக்க இருந்தபோது லண்டன் காவல் துறையிளரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சந்திக்க இயலாமல் போனதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பேராதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட மேற்கொண்ட இப்பயணத்தில் லண்டனில் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு பேருதவியாக இருந்த இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்களுக்கும். தூதரக உயர் அலுவலர்களுக்கும். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்றும் விருப்பக் கடிதம் வழங்கிய தொழில் நிறுவனங்கள், அதன் கூட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்கு ஏதுவாக சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துக்கூறிய முன்னணி நடிகரும். மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும் இங்கிலாந்து பயணத்தின்போது நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டின் திறன்மிக்க மனிதவளம் வலுவான தொழில்துறை அடித்தளம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் இங்கிலாந்து வெற்றிப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும். முதலீட்டு ஈர்ப்புக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை உலக முதலீட்டார்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT