தமிழக செய்திகள்

சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்டவர் இரட்டைமலை சீனிவாசன்: கனிமொழி எம்.பி.

சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.

சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT