அதிமுக 
தமிழக செய்திகள்

மக்கள் குறைகளை சொல்ல வந்தால் தாக்குவதா?- துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்

மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல் அமைச்சர் விஜய் அவர்களே..உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?

மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்!ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?” என்று பதிவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT