தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியா.? - அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

தவெகவின் வெற்றியை அனைத்து கட்சிகளும் கணிக்க தவறிவிட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

தவெகவின் வெற்றியை திமுக உட்பட அனைத்து கட்சிகளும் கணிக்க தவறிவிட்டன. தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. வ்மக்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளனர். வருகிற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் ஆதவ் அர்ஜுனா அரசியலை விட்டு விலகுவாரா?

திருச்சி கிழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினோம். திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை கூடி முடிவு செய்யும். தலைமை முடிவு எடுத்தால் மு.க.ஸ்டாலின் போட்டிடுவார். போட்டியிடுவது குறித்து திமுக தலைமை முடிவு செய்யும். அதிமுகவில் இருந்து புரியாமல் சிலர் தவெகவுக்கு செல்கிறார்கள். புரிந்ததும் திரும்பி வருவர்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.