நயினார் நாகேந்திரன்  
தமிழக செய்திகள்

நடிகர் தனுஷ் பின்னால் பாஜக உள்ளதா? நயினார் நாகேந்திரன் பேட்டி

பொதுவேட்பாளருக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு என்றால் நாங்களும் தேசிய தலைமையில் பேசி முடிவு அறிவிப்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய் அவர்," திமுகவும் தவெகவும் பெரியார் பெயரை சொல்லி வருகின்றனர். பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் சொல்லும் நிலையில் ஏன் இதுவரை புகார் இல்லை. யார் மீதும் வழக்கு இல்லை. இதுவே சந்தேகத்தை எழுப்புகிறது. அகல் விளக்கு என்ற நிறுவனத்தின் மூலம் ஊழல் நடப்பதாக சொல்லும் நிலையில் அமைச்சருக்கும் இதில் தொடர்பா? என்ற கேள்வி உள்ளது.

அதிகமான நூல்கள் திமுக ஆட்சியில் கொடுத்தால் தவெக ஆட்சியில் தான் நூலகம் திறக்கப்பட்டது. நூலகத்தில் உள்ள நூல்களின் எழுத்தாளர்கள் விபரம் முறையாக கையாளப்பட்டதா என்ற கேள்வி உள்ளது. பதிப்பகம் குறித்த தகவல் என்பதே இல்லை.எழுதாத புத்தகம் வைக்கப்பட்டதாக சந்தேகம் உள்ளது. சங்க இலக்கிய நூல்கள் வைக்கப்படதில் பல குழப்பம் உள்ளது. விஜய் என்ற பெயரில் அதிகமான எழுத்தாளர்கள் புத்தகம் வைக்கப்பட்டது. திரிசா விஜய் பெயர் கொண்ட எழுத்தாளர் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

அம்பையில் நான் போட்டியிடுவதா என்பதை இதுவரை முடிவில்லை. தேர்தல் கூட்டணி என்பது தேர்தலை பொருத்து. கடந்த முறை எங்களிடம் ஆதரவு கேட்டனர் இன்னும் தேர்தல் அறிவிப்பு இல்லை. தேசிய தலைமை முடிவு தான் தேர்தல் குறித்த முடிவு அறிவிப்பாகும். பொதுவேட்பாளருக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு என்றால் நாங்களும் தேசிய தலைமையில் பேசி முடிவு அறிவிப்போம். யாருக்கு பின்னாடியும் பாஜக இல்லை. பாஜக ஒரு சுயம்பு கட்சி. தனுஷ் தனது மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தி தாமரை சின்னம் பொறித்த காமாட்சி விளக்கு கொடுத்ததாக கேட்கிறீர்கள். தாமரை என்பது மகாலட்சுமி. மகாலாட்சுமி எல்லோர் வீட்டிற்கும் போக வேண்டும் என்றால் தாமரைக்கு ஓட்டு போட வேண்டும்” என்றார்

SCROLL FOR NEXT