தமிழக செய்திகள்

‘த.வெ.க.வினர் கூறிய மாற்றம் என்பது பெயர் மாற்றம் தானா?’ - கீதா ஜீவன் விமர்சனம்

மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் மேலோங்குகிறது என கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தி.மு.க. அரசு கொண்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தை 'மகளிர் பயணம்' எனப் பெயர் மாற்றியிருக்கிறது த.வெ.க. அரசு. அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டுக்கு விடியலை கொடுத்தது நமது தி.மு.க. அரசு.

தற்போதைய த.வெ.க. அரசு, மீண்டும் தமிழ்நாட்டை இருண்ட காலமாக மாற்றப் போவதால் 'விடியல்' என்ற சொல்லை அவர்களாகவே நீக்கியிருக்கிறார்கள் போல..! மகளிர் விடியல் பயணத்தில் விடியலை தூக்கியவர்கள், வரும் நாட்களில் 'மகளிர் பயணம்' என்ற சொற்களையும் தூக்கிவிட்டு இத்திட்டத்தையே நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் பெண்களிடையே மேலோங்குகிறது! மாற்றம் என்று தவெகவினர் கூறியது பெயர் மாற்றம் தான் போல!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.