தமிழக செய்திகள்

பட்டினப்பாக்கத்தில்தான் அமைகிறதா புதிய தலைமைச் செயலகம்? - பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர்

பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..

திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்

முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து, பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது

சேதம் அடைந்த வீடுகளை இடிக்க டெண்டர்

இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம் பெற்றுள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் அமையும் இடத்தில் உள்ள, சேதமடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதனால், பட்டினப்பாக்கத்தில்தான் தலைமை செயலகம் அமைய உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT