சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஆசிய கண்டத்திலேயே கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலையை கற்பித்து தரப்படும் கல்லூரி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கல்லூரியில் 90 சதவீதத்திற்கும் மேல் பேராசிரியர்கள் மற்றும் அந்த கல்லூரிக்கு முதல்வரே இல்லை என்ற செய்தி மிகவும் கவலை தரக்கூடிய வகையில் உள்ளது.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சிறப்பு வாய்ந்த இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வரை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.