தமிழக செய்திகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் மும்மொழி கொள்கை அமலா? டி.ஆர்.பி.ராஜா கேள்வி

அரசு மருத்துவமனை மாத்திரைக் கவர்களில் இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் மாத்திரைக் கவரில் தமிழ்,

ஆங்கிலத்துடன், தற்போது இந்தியும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரை இரு மொழியில் இருந்த விபரங்கள், மும்மொழிக்கு மாறியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படும் காகித உறைகளில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருப்பதாக தவெக அரசு மீது திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, டிஆர்பி ராஜாவின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல. முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை.

தமிழகத்தில் மாற்றம் இல்லை; நாற்றம்தான் உள்ளது. இந்தி எதற்கு? மேலும் ஒரு துரோகம்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT